உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது, காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.