உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மூலம் இயங்கி வரும் 150 எரிபொருள் நிலையங்களையும், 50 புதிய எரிபொருள் நிலையங்களையும் இயக்க 20 ஆண்டுகளுக்கு சைனோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply