பாடசாலைக்குச் செல்லும் 14 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், பாடசாலை மாணவனான 18 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை வெதிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் தனது சித்தப்பாவின் வீட்டு வந்தபோது, சந்தேகநபர் தன்னுடைய அறையில் வைத்தும் தந்தையின் அறையில் வைத்தும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட நபரும் உறவினர்கள் என்பதுடன் 2023 பெப்ரவரி மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஒருநாள், சம்பவத்தை நேரில் கண்டு, சந்தேகநபரை தாக்கியதுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்தே சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.