ஜூன் 2ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்த இந்த விபத்து மொத்தம் மூன்று ரயிகளுக்கு நடுவே நடந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.

அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார்.

“இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” என்று தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply