அவர் விமானத்தின் கதவுகளை திறந்தவேளை நான் வாழ்க்கையில் என்ன தவறுசெய்தேன் என நினைத்தேன் என கடந்த மாதம் ஏசியான விமானநிலையத்தின் அவசர நிலை கதவுகளை ஒருவர் திறந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது

விமானத்தில் பயணிக்கும்போது உங்களிற்கு மோசமான ஆசனம் கிடைக்கின்றதே என நீங்கள் நினைத்துப்பார்ப்பவரா அப்படியானால்  லீ  யூன் யுன்னிற்காக ஒரு நிமிடம் அனுதாபப்படுங்கள்.

ஏசியானா எயர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்வேளை – விமானத்தின் அவசரநிலை கதவை திறந்தார்.

நான் மரணம் குறித்த பெரும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன் நான் மரணிக்கப்போகின்றேன் என நினைத்தேன் எனதுமரணம் நிகழப்போகின்றது என தனது அந்த நிமிடத்தை நினைவுகூர்ந்தார் லீ.

தென்கொரிய விமானத்திலேயே இது  இடம்பெற்றது.

பேரழிவை காண்பிக்கும் படங்களில் விமானத்தின் கதவை திறந்தவுடன் அனைவரும் உயிரிழப்பார்கள் நான் எனது வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன் என நினைத்தேன்  அது ஒருவிரைவான தருணம் ஆனால் மனதில் பல எண்ணங்கள் ஓடின என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது மொபைலில் யூடியுப்பை பார்த்துக்கொண்டிருந்தவேளை அருகிலிருந்தவர்  விமானத்தின் கதவினை திறந்தார், விமானத்தின் கதவுதிறக்கப்பட்டதும் காற்று வேகமாக அடித்தது, அவரது தொப்பியும் எயர்போனும்  காற்றின் வேகத்தில் வீழ்ந்தன,சுவாசிப்பது கடினமானயிருந்தது.

நிமிர்ந்துபார்த்தபோது அவசர கதவுகள் இருக்கவேண்டிய இடத்தில்  மேகம் காணப்பட்டது,விமானம் இறங்கிக்கொண்டிருந்தது ஆனால் இன்னமும் 700 அடி உயரத்திலிருந்தது.

லீ அழிவு நிச்சயம் என நினைத்தார்.

தனக்கு அருகிலிருந்தவரை பார்த்தவரை பார்த்தவேளை அவரும் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தமை தெரிந்தது.

நான் கீழே பார்த்தபோது அவரது கால்பாதம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

ஆனால் அதுவரை அவருக்கு இந்த விபரீதத்திற்கு காரணமானவர் தனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் என்பது தெரியாது.

நான் அவர் கதவை திறந்ததை பார்க்கவில்லை தொழில்நுட்ப கோளாறு என்றே நினைத்தேன் என்கின்றார் லீ.

விமானத்தின் சக்கரங்கள் தரையை தொட்டவேளை அருகிலிருந்தவர் விமானத்திலிருந்து குதிக்க முயன்றார் என்கின்றார் லீ- அவர் அச்சத்தின் காரணமாகவே இதனை செய்ய முயன்றார் என நினைத்தேன் என குறிப்பிட்டார்.

நான் உடனடியாக ஏனைய பயணிகளின் உதவியுடன் அவரை மடக்கிபிடித்தேன் விமான பணியாளர்களை உதவிக்கு அழைத்தேன் என்கின்றார் அவர்.

அதன் பின்னரே என்ன நடக்கின்றது என்பது லீக்கு தெரியவந்தது.

 

விமானம் தரையிறங்கியதும்  பொலிஸார் 30வயது நபர் ஒருவரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்,தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான்விரைவாக  வெளியேற முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் விமானத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவேளை அமைதியிழந்தவராக காணப்பட்டார் என்கின்றார் லீ

Share.
Leave A Reply