யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் நேற்றும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இடம்பெறும் கட்டுமானங்களின் போது, சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி ஊர்காவல்துறை பொலிஸார் நீதிமன்ற கட்டளையை பெற்று நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அவை சுமார் 20 வருடங்கள் முன்னரான மனித எச்சம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சான்று பொருட்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply