பிரான்சில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வியொன்றை எழுப்ப முடியாமல் தவிப்பதாகத் தோன்றிய போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழில் ஒரு கேள்வியை முன்வைக்கச் சொன்னார்.

பிரான்ஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது செயற்பாட்டாளர், ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் இலங்கையின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அரசாங்கம் ஜனநாயகமானது என்று தான் நம்பவில்லை என்றும் செயற்பாட்டாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, செயற்பாட்டாளர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு தமிழ் தெரியும் என்றார்.

Share.
Leave A Reply