ரஷ்யாவில் இரத்தக்களரி தவிர்க்கப்பட்டதுடன், சர்வதேச ஒழுங்கை மேலும் சீர்குலைக்க விரும்பாத பலருக்கு நிவாரணம் கிடைக்கும்.

ரஷ்ய PMC வாக்னரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், தனது படைகள் ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள விமானத்தளம் உட்பட இராணுவ தளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், ‘மொஸ்கோவுக்கு’ முன்னேறுவதாகவும் அவரது வீரர்கள் மூன்று ரஷ்ய ஹெலிகொப்டர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்த சனிக்கிழமைக்குள் ரஷ்யா உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக தோன்றியது.

ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து கிட்டத்தட்ட 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான வோரோனேஜையும் வாக்னரைட்டுகள் கைப்பற்றினர்.

ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்ட ரஷ்யா ஜனாதிபதி புடின், வாக்னரைட்டுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

உக்ரைனில் இடம்பெறும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு ரோஸ்டோவ்-ஆன்-டான் தலைமையகமாக இருந்ததாலும், ரஷ்ய துருப்புக்களுக்கான அனைத்து விநியோகங்களையும் வாக்னரால் துண்டிக்க முடியும் என்பதாலும், உக்ரைனில் ரஷ்ய முன்னணி வீழ்ச்சியடையும் என்ற பரவலான நம்பிக்கையும் இருந்தது.

ரஷ்ய நேரப்படி, சனிக்கிழமை (24) மாலையளவில் 5,000 பேர் கொண்ட வாக்னர் அணியினர் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தை கையகப்படுத்திய சில மணிநேரங்களில் மொஸ்கோ பிராந்தியத்துக்கு சென்றது.

செச்சென் அக்மத் அணியினர் மொஸ்கோ பிராந்தியத்திலும் ரோஸ்டோவிலும் அவர்களை சந்திப்பதற்கு நகர்வதாக செய்திகள் வெளிவந்தன.

புட்டினுக்கு விசுவாசமான செச்செனியர்களுக்கும் வாக்னரைட்டுகளுக்கும் இடையிலான மோதல் உள்நாட்டுப் போரின் ஆரம்பத்தை குறிக்கும் என்று நான் உட்பட பலர் நினைத்தோம். இருப்பினும், வாக்னரைட் கலகம் ஆரம்பித்தவுடனேயே அது முடிவடைந்துவிட்டது.

பிரிகோஜின் மற்றும் அனைத்து வாக்னரைட்டுகளும் மொஸ்கோ ஒப்லாஸ்டிலிருந்து திரும்பி வருவது மட்டுமல்லாமல், ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள தெற்கு இராணுவ மாவட்ட தலைமையகத்தை விட்டு வெளியேறினர்.

வெளிப்படையாக, அவர்கள் பெலாரஸில் பணியமர்த்தப்படுவார்கள் என்பதுடன் பிரிகோஜின் மற்றும் அனைத்து வாக்னரைட்டுகளுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்படும். தற்போது நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

வாக்னர் கலகத்துக்கு என்ன காரணம்?

கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், ப்ரிகோஜின், புட்டின் நெருங்கிய கூட்டாளியான பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோருடன் அதிகம் பகிரங்கப்படுத்தப்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக முடக்குதலை நோக்கித் தள்ளப்பட்டதாக தெரிகிறது.

இருப்பினும், ரஷ்யாவை சீர்குலைப்பதற்காக நேட்டோவிடம் இருந்து பிரிகோஜின் பணம் பெற்றிருக்கலாம் என்று ஊகிப்பவர்களும் உள்ளனர்.

பிரிகோஜின் உக்ரேனிய உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புடைய வரலாற்றை கொண்டிருப்பதால், இதுவும் சாத்தியமாக இருக்கக்கூடியதாகும்.

வாக்னர் 2014இல் நிறுவப்பட்டதுடன் ரஷ்ய அரசு மற்றும் அதன் நட்பு நாடுகளின் சார்பாக பல மிருகத்தனமான போர்களை நடத்தியது.

இது 2014 முதல் 2015 வரை உக்ரைனுக்கு எதிரான போரில் சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளுக்கு உதவியது.

சிரியா, லிபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் மாலியில் உள்நாட்டுப் போர்களில் போராடியதுடன், ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்த படைகளின் பக்கத்தில் போராடியது.

அத்துடன், மிக சமீபத்தில் உக்ரைனில் ரஷ்ய படைகளின் சில வெற்றிகளுக்குப் பின்னால் காணப்பட்டது.

பக்முத்தின் பேரழிவுப் பிரிவிலிருந்து விலகிய பிறகு, பிரிகோஜின் ரஷ்ய படைகளின் தலைமையை கடுமையாக விமர்சித்ததுடன், குறிப்பாக, புட்டின், நெருங்கிய கூட்டாளரான பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் ரஷ்யாவின் ‘முன்னணியில் மிகக் கடுமையான இழப்புகளை’ தன்னிடம் இருந்து மறைத்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார்.

இந்த ஜோடி திறமையற்றதுடன், உக்ரைனில் சண்டையிடும் வாக்னர் பிரிவுகளை வேண்டுமென்றே குறைவான வளங்களை தருவதாக அவர் மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஜூன் மாத முற்பகுதியில் வாக்னரைட்டுகள் பாதுகாப்பு அமைச்சுடன் நேரடியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட முயன்றதுடன், இந்த நடவடிக்கையை பிரிகோஜின் வெளிப்படையாக எதிர்த்தார்.

பிரிகோஜினின் ‘அறிக்கைகள்’ ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சமமானவை என்று குற்றஞ்சாட்டி, FSB ‘ஒரு குற்றவியல் வழக்கை ஆரம்பித்துள்ளது’ என்று TASS அறிவித்தது.

கடந்த ஜூன் 24ஆம் திகதி வாக்னர் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தை கைப்பற்றினார்.

ஆனால், ப்ரிகோஜின் ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமே வெளிப்படையான கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற அனுமானத்தின் கீழ் செயற்படுவதாக தோன்றியது.

வாக்னர் தலைவர் ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார்.

ப்ரிகோஜினின் நடவடிக்கைகள் ‘தேசத்துரோகம்’  என்றும், ‘ரஷ்யாவை காட்டிக் கொடுத்தவர்கள்’, ‘பொறுப்புக்கூற வைக்கப்படுவார்கள்’ என்றும் சபதம் செய்த ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை தொடர்ந்து அவர் புடினை மட்டுமே இலக்கு வைத்தார்.

புடினின் பேச்சுதான் வாக்னரின் நீதிக்கான அணிவகுப்புக்கு வழிவகுத்தது. ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஆகியோர் இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்து என்ன நடைபெறும்?

மிருகத்தனமான போரை மீண்டும் மீண்டும் பார்த்த மேல்தட்டு துணை இராணுவ துருப்புக்கள், துரோகங்கள் அல்லது தோல்விகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக திரும்புவது இது முதல் முறையல்ல.

சனிக்கிழமை நிகழ்வுகள் ஒப்பீட்டளவில் இரத்தம் இல்லாமல் முடிவடைந்த போதிலும், இது புட்டினின் அதிகாரம் தொடர்பில் பல வினாக்களை எழுப்பியுள்ளது என்பது வெளிப்படையாகும்.

25,000 ஆண்களுடன் வாக்னர் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முடிந்ததுடன், இது அணு ஆயுதங்கள் உட்பட ரஷ்ய இராணுவச் சொத்துக்களில் 25 முதல் 40 சதவிகிதம் வரை கொண்டிருந்தது மட்டுமன்றி, மொஸ்கோவில் இருந்து சில நூறு கிலோ மீற்றர்களுக்குள் அணிவகுத்துச் செல்ல முடிந்தது. வழக்கமான ரஷ்ய பிரிவுகளில் வாக்னருக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு மற்றும் அனுதாபம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

மேலும், விமானப்படை தரைப் பிரிவுகள் மற்றும் செச்சென்ஸின் சில பிரிவுகளைத் தவிர, மொஸ்கோவுக்குச் செல்லும் வழியில் வாக்னர் அணிவரிசைகளை நிறுத்துவதற்கு புடினுக்கு வேறு நம்பகரமான துருப்புக்கள் இல்லை. இது ரஷ்ய அரசாங்கத்தின் விசித்திரமான போர் அணிதிரட்டல் கொள்கைகளின் விளைவாகும்.

சில வாரங்களுக்கு முன்னர், ‘தி எகனாமிஸ்ட்’, ரஷ்யாவின் இராணுவச் செலவீனம் தொடர்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அந்த ஆக்கத்தின்படி, உக்ரைன் போர் தொடர்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் (67 பில்லியன் டொலர்) பயன்பட்டது. பல சக்தி வாய்ந்த நாடுகளுக்கு எதிராக ரஷ்யா பினாமி போரில் ஈடுபட்டுள்ளதால் இவை அதிர்ச்சியூட்டும் இலக்கங்களாகும்.

வரலாற்று ரீதியாக அதிக இராணுவ செலவினங்களைக் கொண்ட அரசுகள் அல்லது கூட்டணிகள் எப்போதும் வெற்றி பெறுகின்றன.

மிகக் குறைந்த அளவோடு கரை சேர்க்கும் ரஷ்யாவின் கொள்கையானது இராணுவ ரீதியில் சந்தேகத்துக்குரியதுடன் பாரிய அபாயங்களை ஏற்படுத்துகிறது.

உக்ரைன் GDPயில் 18.2 சதவிகிதம் அல்லது 32 பில்லியன் டொலர்களை 2023ஆம் ஆண்டு போருக்காக செலவிட திட்டமிட்டிருந்தது.

இந்த ஆண்டு உக்ரைனுக்கு 160 பில்லியன் டொலர்கள் உதவி கிடைக்கும் என்று கேல் நிறுவனம் கணித்துள்ளது.

அடிப்படையில் உக்ரைன் ரஷ்யாவை விட அதிகமான செலவீனத்தை செய்கிறது. புடின் சமூகத்தை அணி திரட்டவில்லை, படைகளை உயர்த்தவில்லை அல்லது பொருளாதாரத்தை போர்க்கால கட்டத்தில் வைக்கவில்லை.

2022இல் பிரிகோஜின் ‘ஸ்டாலின்கிராட்டை விட கடினமானது’ என்று வர்ணித்த ஒரு போருக்கான விசித்திரமான செலவீனமாகும்.

உக்ரைனில் அவர்களின் சமீபத்திய வகிபங்கு காரணமாக ரஷ்யர்களிடையே வாக்னர் மீது நல்லெண்ணம் நிறைய உள்ளதுடன், இது அவர்கள் எதிர்ப்பின்றி இருப்பதற்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.

ரஷ்ய இராணுவமும் குடிமக்களும் விரோதமான வெளிநாட்டினரின் படையை நாடு முழுவதும் அணிவகுத்துச் செல்ல அனுமதிப்பார்கள் என்பது சாத்தியமில்லை என்றாலும், இந்த பலவீனம் ரஷ்யாவின் பல எதிரிகளை ஊக்கப்படுத்தியிருக்கும்.

இதற்கிடையில், ரஷ்யாவின் கூட்டாளிகள் சனிக்கிழமையன்று நடந்த நிகழ்வுகளை ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் பார்த்திருப்பார்கள்.

சீனா, இந்தியா, ஈரான், சிரியா மற்றும் பல தென் அமெரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகள், ரஷ்யாவில் ஒரு நிலையான நீண்ட கால கூட்டாளியைத் தேடுவது இந்த முன்னேற்றங்களால் தொந்தரவு செய்யப்பட்டிருக்கும் என்று கூறுவது ஒரு குறைமதிப்பீடாகும்.

ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிரிகோஜின் விரும்பினார். மேலும், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஷோய்கு புடினின் உறுதியான கூட்டாளராவார். ஷோய்கு மற்றும்

ஜெராசிமோவ் உக்ரேனில் ரஷ்ய  நடவடிக்கைகளை தூண்டிவிட்டனர் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், புட்டின் அவர்களை அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது ரஷ்ய ஜனாதிபதிக்கு ரஷ்யாவில் அதிகாரத்தின் ஒரே நெம்புகோல் இருக்கவில்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது.

மொஸ்கோ பிராந்தியத்தில் வாக்னர் ஊடுருவலுக்கு பல ஜெனரல்களும் மந்தமாக இருந்ததுடன் விமானப்படை மட்டுமே புட்டினுடன் விசுவாசமாக நின்றது. புடின் அதனுடன் கொண்டு நடத்த முடியுமா என்பதற்கு வரும் வாரங்களே பதிலளிக்கும்.

(ரதீந்திர குருவிட்ட)

 

Share.
Leave A Reply