முன்புற சக்கரம் இயங்காத நிலையில், பயணிகள் விமானமொன்று தரையிறங்கிய சம்பவம் அமெரிக்காவில் புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
டெல்டா எயார்லைன்ஸுக்குச் சொந்தமான பிளைட் 1092 விமானம் வட கரோலினா மாநிலத்திலுள்ள சார்லட் நகரின் சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாறு தரையிறங்கியது.
அட்லாண்டா நகரிலிருந்து வந்த போயிங் 717 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 104 பேர் இருந்தனர். எனினும் இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்புற சக்கரத்தை கீழிறக்குவதற்கான கதவு திறக்கப்பட்டபோதிலும், சக்கரம் கீழிறங்கவில்லை.
இவ்விமானம் தரையிறங்கியபோது பயணிகள் மத்தியில் குழப்பநிலை எதுவும் ஏற்படவில்லை என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.