காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவுக்கான பயணிகள் மற்றும் சரக்கு சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை இந்தியாவால் அனுமதியோ அல்லது சேவையோ வழங்கப்படவில்லை.
இந்தச் சேவைக்கு இந்தியா அனுமதி வழங்கியவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வது ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, யாழ்ப்பாண நகரம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதே திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இவ்வருட தொடக்கத்தில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, ஆரம்பம் தாமதமாகியுள்ளது.