இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணைகளை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையில் 1974 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மீனவர்கள் நல சங்கத்தினால் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை மீட்கவும், 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என நேற்று கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து, மீண்டும் வழக்கு விசாரணையை நாளை (12) முன்னெடுக்க நீதிபதிகள் தீர்மானித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Share.
Leave A Reply