நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் மூக்கின் வழியாக இரத்தம் கசிவதாகவும் பெண்ணின் உயரம் 5 அடி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ள நீர்கொழும்பு பொலிஸார், அங்கு விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.

 

Share.
Leave A Reply