களுத்துறை, வஸ்கடுவ கடலில் ஞாயிற்றுக்கிழமை (23) நீராடிய ரஷ்ய தம்பதியினர் பாரிய அலையில் அடித்து செல்லப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றச் சென்ற இலங்கையின் உயிர்காப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய பெண்ணொருவர் உதவி புரியுமாறு கூச்சலிட்டதை கேட்டு உயிர்காப்பு வீரர் கடலில் குதித்துள்ளார்.

இந்நிலையில், அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென பாரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர், நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கடலுக்குள் இறங்கிய நிலையில் அவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கடலில் நீராடிய போது அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதி உட்பட நான்கு பேரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த உயிர்காப்பு வீரர் களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிர்காப்பு வீரராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply