கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் விடுதி, விளையாட்டு மைதானம், ஆலயம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கிராம மக்கள் இணைந்து பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசாரல் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் படி கிளிநொச்சி நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடைக்கு அதன் உரிமையாளர் எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மூலம் குறித்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிரதேச மக்களால் இன்று புதன்கிழமை (26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏ-32 மன்னார் பூனகரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முழங்காவில் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடி நிலமைகளை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply