திஸ்ஸமஹாராம – கதிர்காமம் பிரதான வீதியின் 6ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேனின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்தில் இடம்பெற்ற பூஜைக்காக கிரிந்தையிலிருந்து பயணித்த வேன் ஒன்றே மோட்டார் சைக்கிளை மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply