இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 63 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 205 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply