1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று சென்று பார்வையிட்டார்.

Share.
Leave A Reply