ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி செல்லும் போது அந்த ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது போல தோற்றமளிக்கும். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், சாலையில் செல்லும் போது மற்ற பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்தோனேஷியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் என்ற அந்த வாலிபர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் வடிவமைப்பை மாற்றி சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.

அதாவது ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி செல்லும் போது அந்த ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது போல தோற்றமளிக்கும். அந்த வகையில் தனது ஸ்கூட்டரை அப்படியே மாற்றி வடிவமைத்து சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.

அவரது ஸ்கூட்டியின் சைலன்சர் முன்பக்கம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் இவர் சீட்டிற்கும், ஹேன்டில் பாருக்கும் இடையில் உள்ள இடத்தில் அமர்ந்த படி காலை அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்து வாகனத்தை ஓட்டி உள்ளார்.

பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், சாலையில் செல்லும் போது மற்ற பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை சக பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply