கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு இங்கிலாந்து முழுவதும் பரவி வருகிறது. இந்த புதிய விகாரம் மிக வேகமாக பரவி வருவதாக ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது
அந்த நாட்டு மருத்துவர்கள் இந்த புதிய ரகத்திற்கு EG.5.1 அல்லது Eris என்று பெயரிட்டுள்ளனர்
இது ‘கொவிட் 19 ஓமிக்ரான் வைரஸின் துணை மாறுபாடு என்று கூறப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் பரவும் எரிஸ் வைரஸ் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.