நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அன்டன்தாஸ் வயது (32) நாதன் ரீட்டா வயது (32) எனவும் இருவரும் கணவன் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் சந்தேகநபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
துப்பாக்கி சூடு இடம்பெற்ற இடத்தில் உள்நாட்டில் தயாரிப்பு செய்த துப்பாக்கி ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

