பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற ஈல்-சென்-துனியில் இன்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்

பதினொரு அடுக்குகள் கொண்ட கட்டடத்தின் ஒன்பதாவது தளத்தில் காலை பத்து மணி அளவில் தீ பரவத் தொடங்கியது. 195 தீயணைப்பு வீரர்கள் அறுபது வண்டி வாகனங்கள் சகிதம்

தீயை அணைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் இருவரும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 13 வயதுச் சிறுமி ஒருத்தி உட்பட மூன்று பேரே இந்தத் அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியாகக் குதித்ததில் உயிரிழந்துள்ளார்

எரிந்த கட்டடத்தில் இருந்து பெருமளவில் புகை பரவியதால் அருகே உள்ள கட்டடங்களில் வசிப்பவர்கள் பலரும் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.

Share.
Leave A Reply