யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று (27) தாய் ஒருவருக்கு ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இந்த தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, மூன்று குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.