இன்றைய வெப்பக் குறியீட்டைத் தொடர்ந்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்கள் மனித உடலால் உணர ப்படும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் பாகைக்கு இடைப்பட்டதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், முடிந்தவரை நிழலின் கீழ் இருக்குமாறும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Share.
Leave A Reply