கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற சிறுமியை யாரோ கடத்திச் சென்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 15 வயது சிறுமியே கடத்தப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தையான 57 வயதுடைய நபரே முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ தினமான நேற்று (27) மாலை 4 மணியளவில் தொலைபேசி அட்டை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி திரும்பி வர தாமதமானதால் சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை பொலிஸில் செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.