கந்தானை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிடப்பட்டவற்றின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜா -எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share.
Leave A Reply