யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்றவர்களின் வீடு உடைக்கப்பட்டு , பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கரணவாய் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமது வீட்டினை பூட்டி விட்டு நேற்றைய தினம் புதன்கிழமை சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்று இருந்தனர்.

தேர் திருவிழா முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து உள்ளே சென்று பார்த்த போது , வீட்டில் இருந்த 11 அரை பவுண் நகைகளும் , 75ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply