தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதித் தீர்மானத்திற்காக போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.