இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இன்று உலக தேங்காய் தினத்தை நினைவுகூரும் வேளையில் இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கியது.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளில் தெங்கு தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை 2022 இல் தெங்கு ஏற்றுமதி மூலம் 817 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

தெங்கு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளூர் நுகர்வு ஆகும், மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது.

வட மாகாணத்தில் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Share.
Leave A Reply