இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 405 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், இம்மாதத்தின் கடந்த 06 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்து 896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply