கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளில் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மாணவியே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவி அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply