திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகமுவவை நோக்கி திரும்பிச் சென்றதுடன் செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தொலைபேசி ஊடாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.

அதன் பின்னர் திருகோணமலை பொலிஸ் குழுவொன்று தம்பலகாமுக்கு வந்து செல்வராசா கஜேந்திரன் எம்.பியிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் விசாரணையை சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தது.

இவ்வாறு சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.

திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மணயவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

Share.
Leave A Reply