1000 கோடி வசூலை நெருங்கும் ஜவான் படத்திற்கு முன்னணி பிரபலங்கள் பெற்ற சம்பள விவரங்கள் இதோ. தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஹிந்தி திரையுலகில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

இப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் நெருங்கியுள்ள நிலையில், இப்படத்தில் நடித்த பிரபலங்கள் இப்படத்திற்காக பெற்ற சம்பள விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.

1. ஜவான்

ஜவான் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

2. 1000 கோடி வசூல்

ஜவான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், வசூல் ரீதியாக இப்படம் பிரமாண்ட சாதனை படைத்திருக்கிறது. இப்படம் வசூலில் 1000 கோடிகளை நெருங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.

இப்படத்திற்காக முன்னணி முக்கிய நடிகர் நடிகைகள் பெற்ற சம்பள விவரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ.

3. ஷாருக் கான் – 100 கோடி

ஷாருக்கான் – பாலிவுட் திரைப்பட முன்னணி முக்கிய நடிகராவார். இவர் ஹிந்தி சினிமாவில் சூப்பர்ஸ்டார் நடிகராக ரசிகராக பலரால் கொண்டாடப்படுவர். இவரது திரைப்படங்கள் பெரும்பலம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இவர் நடித்துள்ள ஜவான் படத்திற்காக இவர் 100 கொடிகள் சம்பளமாக பெற்றுள்ளார், மேலும் இப்படத்தின் வசூலில் 60% லாபத்தையும் தனது பங்காக கொண்டுள்ளார், ஷாருக்.


4. நயன்தாரா – 10 கோடி
நயன்தாரா , கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.

இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை …

5. தீபிகா படுகோண்- 15 to 20 கோடி
தீபிகா படுகோண் ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட …


6. விஜய் சேதுபதி – 21 கோடி

விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். 2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் …


7. பிரியாமணி – 2 கோடி
பிரியாமணி என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’  பெற்றுள்ளார்.


8. சன்யா மல்ஹோத்ரா – 3 கோடி

சன்யா மல்ஹோத்ரா – ஹிந்தி மற்றும் இந்தியா சினிமாவின் இளம் நடிகை மற்றும் பிரபல வடிவழகி ஆவார். இவர் நடித்துள்ள ஜவான் படத்திற்காக இவர் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.


9. யோகி பாபு – 35 லட்சம்
யோகி பாபு , விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான ” லொள்ளு சாப ” தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள, இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு பின்னர் இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.

Share.
Leave A Reply