லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது தோழியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மறுத்த தனது காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இளைஞர் ஒருவர் கடந்த சில வருடங்களாக இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இருப்பினும் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் ஜாலியாக இருந்து வந்திருக்கிறார்.

இப்படி இருக்கையில், இன்று தன்னை வந்து சந்திக்கும்படி காதலி கூறவே இவரும் ஜாலியாக புறப்பட்டிருக்கிறார்.

காதலி வீட்டிற்கு சென்ற இவருக்கு அந்த வீட்டில் மற்றொரு இளம்பெண் இருந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தன்னுடைய தோழி என்று காதலி அந்த பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் மூவரும் பேசிக்கொண்டிருக்கையில், இளைஞரின் காதலி, தனது தோழியுடன் நெருங்கி பழக வேண்டும் என்றும், அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனது காதலனை வற்புறுத்தியுள்ளார்.

முதலில் ஏதோ விளையாட்டுக்குதான் சொல்கிறார் என்று காதலனும் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் நேரம் போக போகதான் காதலி சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை இவர் உணர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் காதலி கட்டாயமாக தனது தோழியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் இளைஞன் மறுத்திருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த காதலி இவரின் அந்தரங்க உறுப்பை கடித்திருக்கிறார்.

இளைஞர் உயிர்போகும் வலியில் கதற அக்கம் பக்கத்தின் இவர்கள் வீட்டிற்குள் வந்து இளைஞனை மீட்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர் புகார் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல காவல்துறை தரப்பிலும் இது தொடர்பான விவரங்களை எதுவும் வெளிப்படையாக பகிரப்படவில்லை.

 

 

Share.
Leave A Reply