சர்­வா­தி­கார அடக்­கு­முறை ஆட்சி நடத்தும் சவூதி அரே­பி­யா­வுக்கும் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இன்று வரை எண்­ணற்ற குற்­றங்­களைப் புரிந்து கொண்­டி­ருக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் உற­வு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மீண்டும் தொட­ரு­கின்­றன.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் மத்­திய கிழக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்தபோது இது பற்­றிய உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­யி­டப்­படலாம் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இதில் வேடிக்கை என்­ன­வென்றால், சவூ­திக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் கடந்த பல தசாப்த கால­மாவே நல்­லு­ற­வுகள் இருந்து வரு­கின்­றன.

மத்­திய கிழக்கில் இடம்­பெற்­றுள்ள எல்லா யுத்­தங்கள், நாடு­களின் ஆட்­சி­யாளர் தெரி­வுகள், ஆட்சிக் கவிழ்ப்­புக்கள் என எல்­லா­வற்­றிலும் இரு தரப்­பி­னரும் இணைந்து பணி­யாற்றி வந்­துள்­ளனர்.

இதில் பெரும்­பா­லான மக்கள் மறந்து போன விடயம் என்ன வென்றால் முதலாம் உலக யுத்­தத்தில் கடை­சி­யாக உலகில் நிலைத்­தி­ருந்த இஸ்­லா­மிய சாம்­ராஜ்­ஜி­ய­மான துருக்கிப் பேர­ரசு அல்­லது ஒட்­டோமான் பேர­ரசு வீழ்த்­தப்­பட்ட பின்­ன­ணியில் தான் சவூதி அரே­பியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடு­க­ளுமே பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­திய சக்­தி­களால் உரு­வாக்­கப்­பட்­டன.

1904இல் பலஸ்­தீ­னத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சனத்­தொகை கணிப்­பீட்டின் படி அங்கு வாழ்ந்­த­வர்­களில் 95 வீத­மா­ன­வர்கள் பலஸ்­தீ­னர்கள். யூதர்கள் ஐந்து வீதம் மட்­டுமே அங்­கி­ருந்­தனர். முதலாம் உலக மகா யுத்­தத்தின் பின் பிரிட்­டனின் ஆதிக்­கத்தின் கீழ் பலஸ்­தீனம் கொண்டு வரப்­பட்­டது. 

அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்கள் சியோ­னிஸ யூதர்­க­ளோடு இணைந்து, உலகம் முழு­வதும் நாடோ­டி­க­ளாக அலைந்து திரிந்த யூதர்­களைக் கொண்டு வந்து பலஸ்­தீன மக்­களின் காணி­களை அப­க­ரித்து அங்கு யூதர்­களைக் குடி­யேற்­றினர்.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக இன­ஒ­ழிப்பை மேற்­கொண்டு அவர்­களை தமது தாயக பூமியில் இருந்து ஓட ஓட விரட்­டினர். தமது காணி­க­ளையும் வீடு­க­ளையும் ஏனைய சொத்­துக்­க­ளையும் இழந்த அப்­பாவி பலஸ்­தீன மக்கள் அகதி முகாம்­களில் தஞ்சம் புகுந்­தனர்.

யூதர்கள், பலஸ்­தீ­னர்­க­ளிடம் இருந்து கைப்­பற்­றிய பகு­தி­களை உள்­ள­டக்கி அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ரஷ்யா என்­ப­ன­வற்றின் ஆத­ர­வோடு தமது இஸ்ரேல் என்ற நாட்டை உரு­வாக்கிக் கொண்­டனர்.

1919 இல் முஸ்­லிம்­களின் புனித நக­ரங்­க­ளான மக்கா மற்றும் மதீனா என்­ப­ன­வற்றின் கட்­டுப்­பாட்­டையும் துருக்கிப் பேர­ரசு இழந்­தது.

பலஸ்­தீ­னத்­துக்குள் இஸ்ரேல் உரு­வாக்­கப்­பட்­டதை மிகக் கடு­மை­யாக எதிர்த்த, மக்­காவில் துருக்கி பேர­ரசின் ஆளு­ந­ராக இருந்த ஷரீப் ஹுஸேன், 1924 மார்ச் 3இல் துருக்கிப் பேர­ரசு வீழ்ச்சி அடைந்து நான்கு தினங்­களின் பின், 1924மார்ச் மாதம் 7ஆம் திகதி; தன்னை மக்­காவின் கலீ­பா­வாக அல்­லது ஆட்­சி­யா­ள­ராக நிய­மித்துக் கொண்டார்.

இந்தப் பிர­க­டனம் பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளையும் சியோ­னிஸ சக்­தி­க­ளையும் ஆத்­தி­ர­ம­டைய வைத்­தது.

எனவே, அவர்கள் அப்­போது றியாத்தில் ஒரு சிறிய பழங்­குடி இனத் தலை­வ­ராக இருந்த அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூத் என்­ப­வ­ருக்கு தேவை­யான ஆயு­தங்­களை வழங்கி, மக்கா நகர ஆளுனர் மீது தாக்­குதல் நடத்­து­மாறு கூறினர்.

இந்த சந்­தர்ப்­பத்தை நழுவவிட விரும்­பாத அப்துல் அஸீஸ், பிரிட்டிஷ் மற்றும் சியோ­னிஸ யூத சக்­தி­களின் உத­வி­யோடு ஆளுனர் ஷரீப் ஹுஸே­னுக்கு விசு­வா­ச­மான படை­யினர் மீது தாக்­குதல் நடத்தி அவர்­களை தோற்­க­டித்தார்.

அங்­கி­ருந்து தப்பிச் சென்ற அந்தக் கூட்டம் அகபா என்ற இடத்­துக்குச் சென்­று­விட்­டது அதன் பிறகு துருக்கி கிலா­பத்­துக்கு எதி­ராக, சர்ச்­சைக்­கு­ரிய வஹ்­ஹா­பிய சவூதி ஆட்சி உரு­வாக்­கப்­பட்­டது.

உலகம் முழு­வதும் உள்ள முஸ்­லிம்­களை இணைக்கும் மையப் புள்­ளி­யாக இருந்த கிலாபத் ஆட்சி முறை இவ்­வாறு தான் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டது.

அதன் பிறகு அப்துல் அஸீஸ் தலை­மையில் பிரிட்டிஷ் மற்றும் யூத கொடுங்கோல் சக்­தி­களின் கரங்கள் சவூதி இல்லம் என்ற புள்­ளியின் மூலம் இந்தப் பிராந்­தி­யத்தில் ஸ்திரப்­ப­டுத்­தப்­பட்­டது.

அல் சவூதி குடும்­பத்தின் அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வுகள் 1930ஆம் ஆண்­ட­ள­வி­லேயே தொடங்கி விட்­டன.

தனது நாட்டின் எண்ணெய் வளங்­களை சூறை­யாட அமெ­ரிக்க கம்­ப­னி­யொன்றை இப்னு சவூத் தெரிவு செய்­ததன் மூலம் இந்த உற­வுகள் தொடங்­கின. அந்த கால­கட்­டத்தில் சவூதி அரே­பியா ஏழ்மை மிக்க ஒரு நாடாக இருந்­தது.

இந்த உற­வு­களைப் பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா, அர­பிகள் மத்­தியில் யூதர்­களின் நலன் பற்­றிய பிர­சா­ரங்­க­ளையும், அவற்றை பிராந்­தி­யத்தில் ஊக்­கு­விப்­ப­தற்­கான சூழ்ச்­சி­க­ளையும் மேற்­கொண்­டது.

1943ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக இருந்த ரூஸ்வெல்ட், 50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை இப்னு சவூத்­துக்கு கொடுத்து,

பலஸ்­தீன மக்­க­ளுக்கு சொந்­த­மான பூமியில் இஸ்­ரேலை ஸ்தாபிக்கும் திட்­டத்­துக்கு ஆத­ரவு திரட்டும் வகையில் அவ­ரது செல்­வாக்கை பிராந்­தி­யத்தின் ஏனைய நாடுகள் மீது பிர­யோ­கிக்­கு­மாறு கேட்டுக் கொண்டார்

இதே காலப்­ப­கு­தியில் பெற்­றோ­லிய வளங்­களும் கண்டு பிடிக்­கப்­பட்­டதால் இர­வோடு இர­வாக எல்­லாமே மாறிப் போய்­விட்­டன. மிகப் பெரிய அள­வி­லான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் பல­வற்றை ஆரம்­பித்த சவூதி அரே­பியா, தனது செல்­வத்தின் பெரும் பகு­தியை அமெ­ரிக்­காவில் முத­லீடு செய்­தது.

இதன் தொட­ராக இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் மிகவும் வலு­வான நிலைக்கு வந்­த­தோடு சவூதி அரே­பியா தனது பாது­காப்பு தேவை­க­ளுக்­காக முழுக்க முழுக்க அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருக்கும் நிலையும் ஏற்­பட்­டது.

இந்த நிலையை தனக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்ட அமெ­ரிக்கா, இஸ்­ரே­லுடன் சவூதி, இர­க­சி­ய­மான உற­வு­களைப் பேண வேண்டும் என அழுத்தம் கொடுத்­தது.

வேறு வழி­யின்றி இந்த அழுத்­தத்­துக்கு அடி­ப­ணிந்த சவூதி அரே­பி­யா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான உற­வுகள் காலப்­போக்கில் மிக உறு­தி­யான நிலையில் இன்­ன­மும தொட­ரு­கின்­றன.

இந்த நிலை­மையத் தொடர்ந்து அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்­ரே­லிய சக்­திகள் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தமது தீய நிகழ்ச்சி நிரலை அரங்­கேற்ற சவூதி அரே­பி­யாவை ஒரு பங்­கா­ளி­யாகப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­தன.

குறிப்­பாக 1979இல் ஈரானில் இடம்­பெற்ற இஸ்­லா­மியப் புரட்சி அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்­ரே­லிய சக்­தி­களை வழிப்­ப­டையச் செய்­தது.

அந்தப் புரட்­சியை முளை­யி­லேயே கிள்ளி எறியும் நோக்கில் அன்­றைய ஈராக் அதிபர் சதாம் ஹுஸைனை ஈரான் மீது படை­யெ­டுப்பு நடத்­து­மாறு தூண்­டி­விடும் பொறுப்பு சவூதி அரே­பி­யா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இதில் சவூதி அரே­பியா வெற்றி கண்­டது. அதன் விளைவு சுமார் எட்டு வருட கால ஈரான் –  ஈராக் கொடிய யுத்தம். இதனால் இரு தரப்­பிலும் சுமார் பத்து லட்சம் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர். இரு நாடு­க­ளி­னதும் சுமார் 800 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழித்து நாச­மாக்­கப்­பட்­டன.

அதன் பிறகு சில வரு­டங்கள் கழித்து ஈராக் மீது அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆத­ர­வுடன் நடத்­தப்­பட்ட படை­யெ­டுப்பு மற்றும் தாக்­கு­தல்­க­ளுக்கு சவூதி அரே­பியா மட்டும் 70 பில்­லியன் டொலர்­களை செல­விட்­டுள்­ள­தாக பஹ்­ரேனை சேர்ந்த செல்­வந்த வர்த்­தகர் ஒருவர் பிற்­கா­லத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

அதன் பிறகு 2010 முதல் 2011 வரை­யான அரபு வசந்த போராட்­டத்தின் விளை­வாக எகிப்­திய மக்கள் மிக நீண்ட காலத்­துக்குப் பின் தமக்கு விருப்­ப­மான முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்­புக்கு சாத­க­மான மொஹமட் முர்­ஷியை ஜன­நா­யக ரீதி­யாக நடத்­தப்­பட்ட நியா­ய­மான மற்றும் நீதி­யான தேர்தல் மூலம் தமது ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­தனர்.

சுமார் 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக எகிப்து ஆனது. இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வான சர்­வா­தி­காரி ஹொஸ்னி முபா­ரக்கின் கீழ் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த மாற்­றத்­தையும் சகித்துக் கொள்ள முடி­யாத தீய சக்­திகள் சவூதி, ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் குவைத் ஆகிய நாடு­களை ஒன்­றி­ணைத்து 11 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை செலவிட்டு எகிப்தில் செயற்­கை­யான உணவு மற்றும் எரி­பொருள் தட்­டுப்­பாடு என்­ப­ன­வற்றை ஏற்­ப­டுத்தி முர்­ஷியின் ஆட்­சியை இரா­ணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தங்­க­ளுக்கு ஆத­ர­வான இரா­ணுவ சர்­வா­தி­காரி அப்துல் பத்தாஹ் அல் சிசியை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்­தனர்.

நாக­ரிக மய­மாக்கல் மற்றும் மேற்­கு­லக மய­மாக்கல் என்ற பெயரில் சவூதி அரசு அண்மைக் காலங்­களில் இஸ்­லாத்தை முழு­மை­யாக ஒதுக்கி வைக்கும் திட்­டத்­தையும் தொடங்கி உள்­ளது.

இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான இந்த மாற்­றங்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் சமயத் தலை­வர்­க­ளையும் போத­கர்­க­ளையும் கூட விட்டு வைக்­காமல் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி அவர்கள் சிறை­களில் அடைக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

ஈவு இரக்­க­மற்ற சவூதி அரசு மக்­களை மிகத் தீவி­ர­மாக நசுக்கி வரு­வதால் மக்கள் எதுவும் செய்ய முடி­யாமல் உள்­ளனர்.

இன்று சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் ஏனைய பெற்றோல் ஷேக்­மாரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்க, ஐரோப்­பிய, இஸ்ரேல் மற்றும் இந்­திய முகாம்­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றனர்.

இந்த சக்­திகள் முஸ்லிம் நாடு­களில் தமது தீய நிகழ்ச்சி நிரலை அமுல் செய்ய துணை­யாக இருந்து வரு­கின்­றனர்.

பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் இழைத்து வரு­கின்ற கொடூ­ரங்­க­ளையும், இந்­தியா உட்­பட ஏனைய நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்டு வரும் அநீ­தி­க­ளையும் இவர்கள் கண்டும் காணாமல் இருந்து வரு­கின்­றனர்.

சவூதி அரசு இஸ்­லாத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்­ய­வில்லை. இவ்­வ­ருடம் மார்ச் மாதத்தில் அவர்கள் ஒரேயடியாக 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றினர். அந்த நாட்டின் நீதித்துறையின் அவல நிலையை இது கோடிட்டுக் காட்டுகின்றது

சவூதி அரேபியா 2022இல் 196 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. கடந்த 30 வருடங்களாக வருடாந்தம் அதிகளவான மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடாகவும் சவூதி அரேபியா உள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் இஸ்ரேலுடனான உறவுகளை சீர் செய்வது எதிர்வு கூற முடியாத பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரான ஜெரூஸலத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை, பலஸ்தீன மக்களுக்கு முடிவற்ற தொல்லைகளைக் கொடுத்து வருகின்ற இஸ்ரேலை அங்கீகரிப்பது, நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply