முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய குருந்திமலை விகாரை வழக்கை விசாரித்த சரவணராஜா, செப்டம்பர் 23 அன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், மாவட்ட நீதிபதி, நீதவான், குடும்ப நீதிமன்ற நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பல்வேறு நீதித்துறைப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.

அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதே அவரது பதவி விலகலுக்கு காரணம் என நீதிபதி குறிப்பிட்டார்.

முன்னதாக, நீதவான் சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்பில் உடனடி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சர் சி.ஐ.டிக்கு விசாரணையை ஒப்படைத்துள்ளார்.

Share.
Leave A Reply