இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது மோசமான பஸ் பயண அனுபவத்தை பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.

நாட்டின் அழகைக் காண கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பேருந்தில் வந்ததாக புறித்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கூறினார்.

“பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சமயங்களில் பிரதான சாலையில் 100kmph ஐ தாண்டியது. நான் எனது கூகுள் மப் (Google Map) செயலியின் மூலம் பஸ்ஸின் வேகத்தை பதிவு செய்தேன்.

பேருந்து பெரும்பாலும் 100kmph வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஓட்டுநரிடம் மெதுவாக வாகனத்தை வெலுத்துமாறும் எங்களைப் பாதுகாப்பாக பொலன்னறுவைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொன்னேன்.

ஆனால் அவர் அதை செவிமடுக்கவோ அதைப்பற்றிப் பேசவோ இல்லை.அவரிடம் பேசும் போது வேகம் 70,75,80 கிலோமீற்றர்  வேகத்தில் இருந்தது.பஸ் பறப்பது போல் இருந்தது. பேருந்து பக்கவாட்டில் வளைத்து அலட்சியமாக மற்ற வாகனங்களை வேகமாக முந்தி சென்றது”.

“இது எங்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தானது, நாங்கள் சாக விரும்பவில்லை, நாங்கள் சுற்றுலாப் பயணிகள், நாங்கள் இலங்கையைப் பார்க்க விரும்புகிறோம், நான் மிகவும் பயந்து, பேருந்தில் அழுதேன், நான் என் அம்மாவிடம் கூட பேசினேன், இலங்கையில் பேருந்துகள் மக்களின் உயிரைப் பணயம் வைத்து இயங்குகின்றன என்று அவரிடம் சொன்னேன்.

இப்போது நான் கண்டிக்கு செல்ல வேண்டும், கண்டிக்கு எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய ஒரு சாதாரண சாரதியுடன் கூடிய பேருந்து எனக்கு தேவை. 100Kmph வேகத்தில்  செல்லும் பைத்தியக்காரன் போன்ற சாரதி வேண்டாம்” என்று பெண் சுற்றுலாப் பயணி கூறினார்.

நகரப் பகுதிகளிலும் நகரங்களுக்கு வெளியேயும் பேருந்துகள் ஓட்டுவதற்கு வேக வரம்புகளை விதிக்கும் விதிகளைப் பயன்படுத்தவும், மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தைத் தாண்டாமல் இருக்கும்படியான விதிகளை அமல்படுத்துமாறு  அதிகாரத்தில் உள்ளவர்களிடம்  அவர் கோரிக்கை விடுத்தார்.

“நான் பேருந்துகளில் ஏறும் போதெல்லாம், பயணத்தின் இறுதி வரை என்னைப் பாதுகாப்பாகவும் உயிருடனும் வைத்திருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து பேருந்தில் ஏறுகிறோம். இலங்கைப் பொதுப்போக்குவரத்து பாதுகாப்பானது அல்ல என இலங்கை மக்களுக்குத் தெரியும் .

“இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. ரயில் நேர அட்டவணையைக் கண்டுபிடிப்பது கூட  மிகவும் கடினமாக இருக்கிறது ” என்று அவர் கூறினார்.

காணொளி –  https://shorturl.at/lmEMQ 

Share.
Leave A Reply