நவீன உலகத்திற்கு ஏற்றார் போல மக்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் வாழ்ந்து வரும் பலவகையான பழங்குடியினர் இன்றளவிலும் தங்களுக்கான பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் இன பழங்குடியின மக்கள் உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக இன்றும் கருதப்படுகின்றனர்.
பல ஆண்டாண்டு காலமான அவர்களின் பாரம்பரியத்தை இன்றும் பிசுராமல் தங்களின் முழு மனதோடு பின்பற்றிவருகின்றனர். முக்கியமாக திருமணம் தொடர்பான விதிகள்.
அதாவது பெண்ணை ஆண் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் பட்சத்தில் முதலில் அந்த மணமகன் மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டுமாம்.
மணமகன் உண்மையிலேயே கடின உழைப்பாளிதான் என்று தோன்றினால் மட்டுமே அவர்கள் சம்மதம் தெரிவிப்பார்களாம்.
அதே போல் “என் மகளுக்காக பையன் எதை வேண்டுமானாலும் செய்வான்” என்பதை நிரூபிக்க பன்றியின் பச்சை ரத்தத்தை அப்படியே குடிக்க சொல்வார்களாம். இந்த பலப்பரீட்சைகளில் மாமனாரின் மனம்கவர்ந்தால் மட்டுமே சம்மதம் தெரிவிப்பார்களாம்.