கிளிநொச்சி கோனாவில் பகுதியில் வியாழக்கிழமை (12) திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கோணாவில் நோக்கி பயணித்த இருசக்கர உழவு இயந்திரமும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply