போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தை தவிர்த்த, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்தப் பெண்ணைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

குறித்த சந்தேகநபர் தம்மைப் பற்றி பொய்யான தகவல்களை வழங்கி இவ்வாறு மறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய அடையாள அட்டை இலக்கம் (696641439) தம்பே சிமிகொட பிரதேசத்தைில் வசிக்கும் கும்பலாத்தர ஆராச்சிகே சேர்ந்த கீதானி தம்மிகா (54) என்ற சந்தேக நபர், ஸ்ரீயலதா சில்வா என்ற போலியான பெயரில் 211 கத்ததர நாகொட வீதியில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 718262925) வசிப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.

மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், போலி நாணயப் பணியகத்தின் பொது தொலைபேசி இலகமான 0112-326670 க்கு அல்லது 0718-594901 தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோருகிறது.

Share.
Leave A Reply