வவுனியா நகரப் பகுதியில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இன்று (24.11) காலை இவ் விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவில்குளம் நோக்கி சென்ற பாரவூர்த்தி நகர பள்ளிவாசல் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போது நகரப் பகுதியில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் வவுனியா, நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த கும்புகேகெதர முத்துபண்டா (வயது 71) என்பவரே மரணமடைந்தவராவார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply