“அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க, அப்புறம் நான் போகமாட்டேன்.

எனினும் நான் டீச்சராகி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்.” என கூறி உறங்கச் சென்று யுவதியொருவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதிக்கு அடிக்கடி சலி காய்ச்சல் ஏற்படுவதுண்டு. அதற்கு சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில் குறித்த உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காலையில் உறக்கத்திற்கு சென்ற மகளிடம் அசைவுகள் இல்லாதமையால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாணவி இறந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழையப் போவதாகவும், அதற்கான ஆடைகளையும் தயார் செய்ததாகவும் தாய் குறிப்பிட்டார்.

இந்த மாணவியின் பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply