இந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெற்றோர் தங்களது ஆண் பிள்ளையை 60 ஆயிரம் ரூபாவிற்கும் ஒரு மாத பெண் குழந்தையை 14 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விற்பனை செய்யப்பட்ட ஆண் பிள்ளை மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply