தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் கமல்ஹாசனையே சாரும். அதேபோல் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், அவர் சினிமாவில் நடிக்க பல தடைகளை கடந்து வந்துள்ளார்.

1960-ம் ஆண்டு வெளியாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் ஜெமினி கணேசனின் மகனாக அறிமுகமாக கமல்ஹாசன் அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், குறத்தி மகன் உள்ளிட்ட சில படங்களில் துணை கேரக்டரில் நடித்திருந்தார்.

ஆனாலும் அவருக்கு சினிமாவில் நிரந்தரமான இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் அவர் உதவி இயக்குனராக சேர்ந்து விடலாம் என்று நினைத்து வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்

அப்போது ஒருநாள் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்துள்ளது.

இதனால் ஆர்வத்துடன் அவரை சந்திக்க சென்ற கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. அப்போது பாலச்சந்தர் இயக்க இருந்த அரங்கேற்றம் படத்தில் நடிப்பதற்காவே கமல்ஹாசனை அவர் வர சொல்லியுள்ளார்.

நீங்கள் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளத்தான் வர சொன்னீங்க என்று நினைத்தேன் என கமல்ஹாசன் அவரிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் பாலச்சந்தர் இந்த படத்தில் நீ நடி உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று சொல்ல, யோசித்த கமல்ஹாசன் சரி சார் நான் நடிக்கிறேன் என்று கூறி கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, தனது நடிப்பில் மூலம் கே.பாலச்சந்தரையே வியக்க வைத்துள்ளார் கமல்ஹாசன். தனது படத்தில் நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று பாலச்சந்தர் முதலில் சொல்லிக்கொடுத்துவிடுவார். அதை தான் நடிகர்கள் பிரதிபலிப்பார்கள்.

அரங்கேற்றம் படத்தில் கே.பாலச்சந்தர் அப்படி சொல்லிக்கொடுத்தும், கமல்ஹாசன் அதில் தனது தனித்திறமையை நிரூபித்து அவரே எதிர்பார்க்காத சில எக்பிரசன்களை கொடுத்து வியக்க வைத்துள்ளார்.

அரங்கேற்றம் படம் முடிந்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசனுக்கும் பலரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்துள்ளது. அப்போது ஒருநாள் கமல்ஹாசன் கே.பாலச்சந்தரை சந்திக்க வந்துள்ளார்.

அவரை பார்த்த பாலச்சந்தர். வாப்பா படம் நல்லா இருக்கு உனக்கு பாராட்டுக்கள் குவிகிறது என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு, மகிழ்ந்த கமல்ஹாசன் அடுத்து ஒரு செக்கை எடுத்து நீட்டியுள்ளார் கலாக்கேந்ராவில் எனக்கு கொடுத்த செக். 37 நாட்கள் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறேன்.

ஆனால் ரூ500 தான் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இதை நான் என்ன செய்யட்டும் திருப்பி கொடுத்துவிடவா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.

அவரை பார்த்து பேசிய பாலச்சந்தர் கொஞ்சம் பொறுமையா இரு இந்த படம் ஒரு சோதனை முயற்சி தான் நீ நல்ல நடிக்கிற உனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு வர போகுது.

அப்போது இதை விட அதிகமா சம்பாதிப்ப. இந்த செக் திருப்பி கொடுத்துவிடாதே எனது அடுத்த படத்தில் உனக்கு நல்ல கேரக்டர் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டக கமல்ஹாசன் கோபத்தை மறந்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.

அதே போல் கே.பாலச்சந்தர் சொன்ன மாதிரியே அவரின் அடுத்தடுத்த படங்களில் கமல்ஹாசன் முக்கிய கேரக்டர்களில் நடித்து தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறியுள்ளார்.

Share.
Leave A Reply