நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

குறித்த வீட்டின் பின் பகுதியில் இருந்து பெற்றோல் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply