தென்கொரியாவில் தொழில் செய்த இலங்கையர் ஒருவர், அவருடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த துலாஜ் சதுரங்க 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான அவரது மனைவி, உயிரிழந்த தனது கணவரான சதுரங்க தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

எனக்கும் சதுரங்கவுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை ஆண்டுகள் ஜப்பானில் பணியாற்றினார். பின்னர் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்ததால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்தார்.

சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர், அவர் எங்கள் வாழ்க்கையை வசதியாக மாற்றும் நோக்கத்துடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏரிகளில் வெல்டராக வேலை செய்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply