நம் நாட்டிற்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார் தெரு பகுதியில் உள்ளநகைக்கடை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்து இரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை பெற்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.