யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 2.30 வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply