இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.”

Share.
Leave A Reply