‘இத்தனை நாட்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள்?’ என்கிற அளவிற்கு போட்டியாளர்களிடமிருந்த கலைத்திறமை இந்த எபிசோடில் அபாரமாக வெளிப்பட்டது. தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நிக்சன் வெறியுடன் ஆடிய அந்த நடனம் இருக்கிறதே!. வாவ்!.. அருமை.
அதை விடவும் ‘எனக்கு ரவுடி கேரக்டரா?’ என்று ஆரம்பத்தில் கலங்கினாலும்.. ‘எலே இசுக்கு..’ என்கிற இழுவையுடன் நாள் பூராவும் அந்த கேரக்டரிலேயே வாழ்ந்து பிரித்து மேய்ந்த அர்ச்சனாவின் ஃபர்பாமன்ஸ் மிக மிக மிக அருமை. அர்ச்சனா, மாயா போன்றவர்களின் நடனங்கள் ஏனோ மெயின் எபிசோடில் மிஸ்ஸிங்.
இதெல்லாம் ஓகே. இத்தனை அருமையாக ஃபர்பார்ம் செய்து விட்டு வழக்கம் போல் கடையில் அழுகிணித்தனம் ஆடி பிக் பாஸையே கண்ணீர் சிந்த வைத்த அந்த மோசமான கிளைமாக்ஸ் இருக்கிறதே?! ஏன் மக்களே.. இப்படிப் பண்றீங்க!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்:Bigg Boss Tamil Season 7 13-12-2023 Vijay Tv Show- Day 73