யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுவதனால் தொடர்ந்தும் பாரிய சிரமங்களை பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ளதாக இதன்போது விசனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடுப்பிட்டியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தின் இறுதியில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறியப்படுத்தும் வகையில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.